கல்லடிப் பாலத்திற்கருகே காணப்பட்டுக் கொண்டிருப்பது. கடற்பாம்புகளா அல்லது வேறு ஏதேனும் கடல் உயிரியா என்பது பற்றிசில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன். இந்தக்கட்டுரை நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும்.
1. கடற்பாம்புகள்
2. மீன்கள்
3. கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும் கடற்பாம்புகளா, அல்லது விலாங்கு மீன்களா?
4. முடிவுரை
01) கடற்பாம்புகள்:
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்பாம்புகள் ஆய்வுகளின் ஒருஉறுப்பினராக (Sea Snakes Survey of Sri Lanka) நான் இருந்து வருகின்றேன். எனவே கடற்பாம்புகள் பற்றி ஓரளவுக்கு என்னால் கூற முடியும்என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
இலங்கையில் 103 இன பாம்புகள் காணப்படுகின்றன (தரை, நன்னீர், உவர்நீர், கடற் பாம்புகள் அடங்கலாக). இவற்றுள் உள்நாட்டுக்குரிய(அதாவது உலகில் எங்குமே காணப்படாத இலங்கையில் மட்டுமேகாணப்படக்கூடிய 48 இனங்களும் 08 உப இனங்களும்அடங்குகின்றன). இவைகள் 12 குடும்பத்திற்குள் அடக்கப்படுகின்றன. இவற்றுள் விசம் கொண்ட பாம்புகள் ஐந்து குடும்பத்திலேயேஇருக்கின்றன.
இவற்றுள் கடற்பாம்புகள் ஹைட்ரோபிடே என்ற குடும்பத்தைச்சேர்ந்தவையாகும். இலங்கையில் 15 இன கடற்பாம்புகள்காணப்படுகின்றன. இவைகளின் வாழிடங்களாக முருகைக்கற்பாறைகளும், கடற்புற்படுக்கைகளும் காணப்படுகின்றன.
கடற்பாம்பின் அமைப்பும், இசைவாக்கங்களும்:
கடற்பாம்புகளானது நீர்வாழ்க்கைக்கான பல்வேறு சிறப்பானஇயல்புகளைப் பெற்றிருக்கின்றன. வயிற்றுப் பக்கமாகதட்டையாக்கப்பட்ட துடுப்பு வடிவான வால் அதன் முன்னேறிச்செல்வதற்கான இயக்கத்திற்கு உதவுகின்றது. இந்த வகையானவால்கள் மற்றைய தரை, நன்னீர், உவர்நீர் பாம்புகளில்காணப்படுவதில்லை. மூக்குப் பக்கமான வால்வுகளுள்ள கண்கள்.இதனுடன் உப்புச் சீராக்கும் சுரப்பியும் காணப்படும். முழு உடம்பின்நீளத்திற்கு சமனான இடதுபக்க சுவாசப்பையையும் கொண்டுகாணப்படும். கடற்பாம்புகள் நைதரசனை தனது தோல்களுக்கூடாகவெளியேற்றும் தகவு கொண்டது. இதன் காரணமாக நைதரசன் வாயுக்குமிழிகள் உடம்பில் சேர்ந்து விடாமல் பாதுகாத்துக் கொள்கின்றது.இலங்கையில் காணப்படுகின்ற கடற் பாம்புகள் 75 சென்ரிமீற்றரிலிருந்து 300 சென்ரிமீற்றர் வரை நீளம் கொண்டுகாணப்படுகின்றது.
விசம்:
பொதுவாக நிலப் பாம்புகளை விட கடற்பாம்புகள் அதிகளவு விசம்கொண்டவை. உலகில் சில நிலப் பாம்புகள் கடற் பாம்புகளைவிட அதிகவிசம் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் இலங்கையைப்பொறுத்தவரை கடற்பாம்புகள் நிலப் பாம்புகளைவிட அதிக விசம்கொண்டவையாக இருக்கின்றன. சில பாம்புகள் நாகப் பாம்பை விட 15 மடங்கு விசம் கொண்டவையாக இருக்கின்றன. கடற் பாம்புகளின்விசமானது நரம்புத் தொகுதியையும், தசைத் தொகுதியைம்தாக்குபவனவாக உள்ளன (nurotoxins and myotoxins).
அதிஸ்டவசமாக, மனிதர்கள் பெரும்பாலும் கடல் பாம்புக் கடிக்குஉட்படுவது குறைவு. கடற்பாம்புகடி நிகழ்வுகள் ஆயுர்வேத, மற்றும்அரச வைத்தியசாலைகளில் அறிக்கை செய்யப்படுவது மிகவும்குறைவு. கடற்பாம்புகள் திடிரென யாரையும் கடிப்பதில்லை. அவைகள்கோபப்படுத்தப்படும் போது தாக்க எத்தனிக்கின்றன.அவ்வாறுகடித்தாலும், அது உலர் கடியாகவே (னுசல டிவைநள) இருக்கிறது.அதாவது விசம் செலுத்தப்படாத கடி. வலையில் மாட்டிக்கொண்டகடற்பாம்பை கழற்றிவிடும்போது, பெரும்பாலும் மீனவர்களே கடிக்குஇலக்காகிறார்கள். 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மீனவர்களுக்குகடற்பாம்பு அதிக விசம் என்ற விடயம் தெரியாது. ஏதோகடல்விலாங்கு மீன் என்று கருதிக்கொண்டு கடற்பாம்புகளைஇலகுவாக கையாழ்கிறார்கள்.
02) மீன்கள்:
பொதுவாக மீன்களை கசியிழைய மீன்கள், முள் மீன்கள் என இருவகைப்படுத்தலாம். கசியிழைய மீன்களுக்கு உதாரணமாக சுறா, திருக்கை போன்ற மீன்களையும், முள் மீன்களுக்கு மற்றையமீன்களையும் உதாரணமாகக் கூறலாம்.
விலாங்கு மீன்:
குடும்பம் அங்குலிடே (Anguillidae) யைச் சேர்ந்தது. புரதானமானஇனம் Anguilla வாகும். இவற்றில் மொத்தம் 18 இன, உப இனங்கள்காணப்படுகின்றன. Anguilla bicolor இரு உப இனங்களைக்கொண்டுள்ளது. அவையாவன அங்குயிலா பைகலர் பைகலர், இங்குயிலா பைகலர் பசிபிகா. அங்குயிலா பைகலர் பைகலர் ஆபிரிக்;ககரையோரங்களிலும், இந்தியா, இலங்கை, பங்களாதேஸ், பர்மா,வடமேற்கு அவுஸ்தரெலியா, பெரிய சுந்தா தீவுகளிலும, இங்குயிலாபைகலர் பசிபிகா சீனாவின் கரைகளிலும், வியட்னாம், பிலிப்பைன்ஸ், போனியொ தீவகள், சுலாவெஸி தீவுகள், நியு கினியா தீவுகள்போன்றவற்றிலும் காணப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை இரு வகையான நன்னீர் இனவிலாங்குகள் காணப்படுகின்றன. அங்குயிலா பைகலர், அங்குயிலாநெபுலோசா என்பனவாகும்.
வாழிடம்:
நிறையுடலி நன்னீர் நிலைகளிலும், இளம் பருவங்கள் சவர்நீர் நிலை, கடல் போன்றவற்றில் காணப்படுகின்றளன. கடலில் முட்டையிட்டுகுஞ்சு பொரித்து, நன்னீர் நீர் நிலைகளான குளம், ஆறுகள்போன்றனவற்றிற்கு திரும்புகின்றன. பெரும்பாலும் சேற்றுப் பாங்கானவாழிடங்களை விரும்புகின்றன. ஆறுகளில் கற்களுக்கிடையிலும்காணப்படுகின்றன. இவை சிறிய மீன்களையும்,கிறஸ்றேசியன்களையும், மொலக்காக்களையும் உணவாகஉட்கொள்ளுகின்றன.
இனப்பெருக்கம்:
கடலில் நிறையுடலிகளால் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கப்பட்டகுடம்பிகள் பல நூறு மைல்கள் வேறொரு பகுகிகளுக்கு கடல்நீரோட்டத்தினால் எடுத்துச் செல்லப்பட்டு ஆறுகளுக்குள்விடப்படுகின்றன. இந்த ஆறுகளுக்குள் ஆயிரக் கணக்காகபடையெடுத்து இலிங்க முதிர்ச்சியடையும் வரை தங்கி, பின்னர்தங்கள் பிறந்த இடங்களுக்கு திரும்புகின்றன. அங்கேயேமுட்டையிட்டு இறக்கின்றன. எல்லா இன அங்குயிலா இனமீன்களுக்கு இந்த வாழ்க்கைமுறை பொதுவாக பொருந்துவதில்லைஎன கூறப்படுகின்றது.
விலாங்குகள், உணவு, அலங்கார மீன் போன்ற தேவைகளுக்காகபல்வேறு மீன்பிடி உபகரணங்களினால் பிடிக்கப்படுகின்றன.
நன்றாக விருத்தி அடைந்த நெஞச்றை செட்டையம், முதுகு, வால், குதச் செட்டைகள் கொண்டு காணப்படும் ஆனால் இடுப்புச் செட்டைகாணப்படாது. பொதுவாக ஆண் மீன்கள் 65 சென்ரி மீற்றர் நீளமாகக்காணப்படும். ஆனால் 120 சென்ரிமீற்றர் நீளம் வரை வளரக் கூடியது.
03) கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும் கடற்பாம்பா,அல்லது விலாங்கு மீனா?
இரு வருடங்களுக்கு முன் நான் எனது சங்கத்திற்கு சமர்ப்பித்தஅறிக்கையி;ன் அடிப்படையில் சில பகுதிகளை பார்க்கலாம். உயிருள்ள மாதிரிகளும், உயிரற்ற மாதிரிகளும் பரீட்சிக்கப்பட்டு, சிலமுடிவுகள் பெறப்பட்டன. பிடிக்கப்பட்ட மாதிரிகளில் பூப்பிளவுகள் (gills) அல்லது பூக்கள் தெளிவாகக் காணப்பட்டன. இது மீன்களின் ஒருஇயல்பு. இதனூடாகவே சுவாசம் நடைபெறுகின்றது. பாம்புகளில் இந்தபூப்பிளவுகள் அல்லது பூக்கள் காணப்படுவதில்லை. செட்டைகளும்(fins) காணப்பட்டன. செட்டைகளும் பாம்புகளில் காணப்படுவதில்லை. எனவே கல்லடி பாலத்தின் கீழ் காணப்பட்டது பாம்பல்ல. வேறு ஒரு நீர்உயிரினம். அது விலாங்காக இருக்கலாம் என கருதுகின்றேன் எனவும், அவை எங்கேயிருந்து எப்படி வந்திருக்கலாம் என்றும், அதன்வாழ்க்கை வட்டத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்தஅங்கத்தவர்களையும் கொண்டிருப்பதன் காரணமாக பல்வேறுநிறங்களில் காணப்படுவதாகவும், அனுபவமற்ற, தூரப்பிரதேசங்களிலிருந்து கொண்டு, களத்திற்கு வராமல் அறிக்கைவிடுபவர்களாலேயே மக்கள் பயப்படுகின்றார்கள் என்றும் அறிக்கைசெய்திருந்தேன்.
எனவே ஊடகங்களுக்கு உள்ள பொறுப்பு, விலாங்குகளுக்குப் பதிலாககடற் பாம்புகளை உலாவவிடுவதல்ல.
04. முடிவுரை:
எனவே இந்தக் கட்டுரையை மூன்று விடயங்களைக் கூறி முடிக்கலாம்என நினைக்கின்றேன்.
1) கடந்த வருடம் வந்ததும் அதே விலாங்கு
2) இந்த வருடம் வந்ததும் இதே விலாங்காக இருக்கலாம்.
3) விலங்குகளின் அசாதாரண நடத்தைக் கோலங்களிற்கும்இயற்கை அனர்த்தங்களின் முன்னெச்சரிக்கைக்கும் தொடர்புகள்இல்லாமல் இல்லை. ஆனால் எல்லா அசாதாரண நடத்தைகளும்முன்னெச்சரிக்கைகள் இல்லை.






0 Comments