Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் மீனவர்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை நிலவுவதன் காரணமாக கடலுக்கு சென்று மீன்பிடிக்கமுடியாத நிலையுள்ளதாகவும் இதன்காரணமாக வறுமை நிலையில் உள்ள மீனவர்கள் குடும்பங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு வாரத்திற்கு மேலாக தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாடம் கடற்தொழில் செய்வோர் வருமானம் இன்றி கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரப்பகுதியில் வீசும் காற்று காரணமாக மீனவர்கள் தொழில்செய்யமுடியாத நிலை தொடர்ந்து நீடித்துவருகின்றது.
கடல் பகுதியில் கடுமையான காற்று வுPசும் தொழிலுக்கு செல்லவேண்டாமென கடற்தொழிலாளர்களுக்கு அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற் தொழிலில் ஈடுபடாத நிலையிருந்துவருவதுடன் கடும் காற்றுக்காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையிலேயே இருந்துவருகின்றது.
ஒரு வாரத்திற்கு மேல் தொழிலுக்கு கடலுக்கு செல்லாத காரணத்தினால் தமது கடுமையான கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
இன்று கடுமையான காற்று வீசுவதனால் மீன்பிடி திணைக்களம் மற்றும் வானிலை அவதான நிலையம் அவதானமாக செயற்படுமாறு கரையோரப்பிரதேச மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் அன்றாட சம்பளத்திற்கு கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
010203

Post a Comment

0 Comments