புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களிற்கான ஆசிரியர் சேவை முன் பயிற்சி வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெறுகின்றது.
வவுனியா தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில் புதிதாக நியமனம் பெற்ற வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 204 பட்டதாரி ஆசிரியர்களிற்கு இப்பயிற்சி வழங்கப்படுகின்றது. நான்கு வளவளர்களினால் நடத்தப்படும் இப்பயிற்சி எதிர்வரும் 31.12.2017 வரை தொடர் பயிற்சியாக 21 நாட்களிற்கு இப்பயிற்சி நெறி நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தில் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தொழிலிற்கு செல்வதற்கான முன் ஆயத்த பயிற்சியாக இப்பயிற்சி உள்ளதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வவுனியா கல்வியற் கல்லூறியில் இப்பயிற்சி தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.




0 Comments