மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 17 வாத்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் நேற்றுதிங்கட்கிழமை) தெரிவித்தார்.“இந்நடவடிக்கையின் போது 110 வர்த்தக நிலையங்கள் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
போலியான நிறுத்தல் மற்றும் அளத்தல் கருவிகளைப் பாவித்தல், சட்டவிரோதமான முறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடல், உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இருநாட்களாக மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஏறாவூர், செங்கலடி, கிரான், ஆகிய பிரதேச செயலகப்பரிவுகளில் பழக்கடைகள், நகைக்கடைகள், மீன்விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள், உட்பட் பல வர்த்தக நிலையங்களில் நடாத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.



0 Comments