Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடு பூராகவும் திடீர் தேடுதல் : 1500ற்கும் மேல் கைது

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 1500ற்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 559 பேரும் , குடி போதையில் வாகனம் செலுத்திய 501 பேரும் , பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த 92 பேரும் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் 722 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையில் 14 ஆயிரத்து 706 பொலிஸாரும் 10 மோப்ப நாய்களும்  பயன்படுத்தப்பட்டுள்ளது.  -

Post a Comment

0 Comments