வெலிக்கடை சிறைசாலையில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாதிவிருந்தால் அறிவிக்குமாறு சிறைச்சாலை மறு சீரமைப்பு மற்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரையில் உயிரிழந்தவர்களுள் 10 பேருக்கும் காயமடைந்த ஐவருக்குமாக நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைசாலையில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இறந்த கைதி ஒருவருக்காக 20 இலட்சம்ச ரூபாவும் காயமடைந்த ஒருவருக்கு 5 இலட்ச ரூபாவும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைவாக இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments