|
மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகமாகப் பயணிக்கும் கொழும்பு செல்லும் பாதையைக் கடந்து சென்ற யானைக் கூட்டத்தினால், மட்டக்களப்பு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பில், அண்மைக்காலமாக யானைகளின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மட்டக்களப்பின் பின்தங்கிய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
|
சில மாதங்களுக்கு முன்னர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பல உயிர்ச் சேதங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற யானைக் கூட்டங்கள் மட்டக்களப்புக்குள் நுழைந்திருப்பது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
|


0 Comments