Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு கனமழைக்கு வாய்ப்பு

அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால்  கனமழை கொட்டப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சியாக பரவியுள்ளது. இலங்கை – தமிழகம் இடையேயான மன்னார் வளைகுடாவில் வளி மண் டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.இதனால், இன்று முதல் திங்கட்கிழமை வரை (நவம்பர் 10 முதல் 13 வரை) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments