வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபை பேரவைச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேர்முகத் தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 182 பேரின் பட்டியலி வெளியிடப்பட்டும் இதுவரை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாததை கண்டித்தே அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தினர்.
|
மாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று அதில் 182 பேர் ஆசியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுடைய பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டிருந்தன. இப் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டு 3 மாதங்கள் ஆகின்ற போதும் இதுவரையில் தமக்கான ஆசிரியர் நியனங்கள் வழங்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசியரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அரசியல் நோக்கங்களுடன், ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். மத்திய அரசாங்கத்தினால் உரிய முறையில் அனுமதி வழங்கப்பட்டும் மாகாண கல்வி அமைச்சினால் எமக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் வடமகாண கல்வி அமைச்சர் இந்நியமனம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றார்கள் என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் உடன் தலையிட்டு தமக்கான நியமனத்தினை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
0 Comments