எட்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌிநாட்டில் தொழில் பெற்றுதருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில், கொழும்பு கோட்டை நீதவான் மற்றும் பிரதம நீதவான் நீதிமன்றங்களால் சந்கேதநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
21 ஊழல் மோசடி தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து சந்தேநபர் நேற்று கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


0 Comments