மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைக்கான புதிய கட்டிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நான்கரை கோடி ரூபா செலவில் இந்த நகரசபைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது.
நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நகரசபைக்கான கட்டிட திறப்பு விழா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கலபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் கலந்துகொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.


0 Comments