இந்தியாவுடனான ஓருநாள் போட்டிகளிற்கான அணித்தலைவராக சமர கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஓரு நாள் போட்டியில் மிகவும் மெதுவாக பந்துவீச்சினை மேற்கொண்டதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணி தலைவர் உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளிற்கு தடைவிதித்துள்ளதை தொடர்ந்தே புதிய அணித்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணித்தலைவர் என்ற வகையில் உபுல் தரங்க இவ்வாறான தடையை எதிர்கொள்வது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது இந்த புதிய நெருக்கடியால் ஓரு நாள் அணிக்கான புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அவசர கூட்டம் இன்று இடம்பெற்றது அதில் கப்புகெதர தலைவராக அறிவிக்கப்பட்டார்
இதேவேளை இலங்கை அணியில் தினேஸ் சந்திமல் மற்றும் லகிரு திரிமன்ன ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


0 Comments