Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் ஆகிய பாவனைக்கான தண்டப்பணமாக 10,000 ரூபா மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனை என தண்டனை வழங்கப்பட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலத்தில் தேசிய சுற்றுச்சூழல் சட்டம் திருத்தங்களின் போது குறித்த தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறித்த சபை மேலும் அறிவித்துள்ளது.
2017 ஜூலை 11ம் திகதி அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய செப்டம்பர் முதலாம் திகதி தொடக்கம் பொலிதீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்டய்ரின் போன்ற உக்காதவையினால் செய்யப்படும் மதிய சாப்பாட்டு பெட்டிகள், கோப்பைகள் மற்றும் கரண்டிகள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கும் இது பொருந்தும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments