இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் மற்றும் அயல் நாடுகளிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.
நிவாரணப் பொருட்களுடனான இரு இந்தியக் கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிலொரு கப்பல் நிவாரணப்பொருட்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)

0 Comments