சற்று முன்னர் ரஷ்ய எல்லை நோக்கி, வட கொரியா பல ஏவுகணைகளை ஏவி பரீட்ச்சித்து பார்த்துள்ளது. இது ரஷ்யாவை சீண்டும் செயலாக உள்ளது. நேற்று மாலை ரஷ்ய அதிபர் புட்டின், அமெரிக்க அதிபரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு , வட கொரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இன்றைய தினம் வட கொரியா ரஷ்யாவை நோக்கி ஏவுகணை பரிசோதனை நடத்தியுள்ளது.
இதனால் ரஷ்யா கடுப்பாகியுள்ளதாக சி.என்.என் செய்தி சேவை சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 வல்லரசுகளை வட கொரியா சீண்டி பெரும் கோபத்திற்கு ஆளாக்கி வருகிறது. ஆனால் எந்த ஒரு அச்சமும் இன்றி இதனை அன் நாட்டு அதிபர் தொடர்ந்து நடத்தி வருகிறார். வட கொரியாவிடம், அமெரிக்காவை காட்டிலும் 3 மடங்கு அதிகமான ராணுவத்தினர் உள்ளார்கள். வடகொரியாவின் ராணுவத்தின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் தாண்டும் என்று கூறப்படுகிறது
Home »
வெளிநாட்டுச் செய்திகள்
» சற்று முன் ரஷ்யா எல்லை நோக்கி வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது
சற்று முன் ரஷ்யா எல்லை நோக்கி வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது
Labels:
வெளிநாட்டுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: