Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மான்செஸ்டரில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் இனம் காணப்பட்டார்

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் தற்கொலை குண்டு தாக்குதலே இடம்பெற்றது என்பது உறுதிசெய்துள்ள காவல்துறையினர். சல்மான் அபெடி என்ற 22 வயது நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
சல்மான் அபெடியின் பெற்றோர்கள் லிபியாவை சேர்ந்தவர்கள் அவர் 1994 இல் பிரிட்டனில் பிறந்தார் என பிரிட்டிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபெடி தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் லண்டனில் இருந்து புகையிரதத்தில் பயணம் செய்துள்ளார். எனவும் பிரிட்டிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அபெடி தனியொரு நபராக செயற்பட்டாரா அல்லது பலர் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பதை கண்டறிவதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளோம் என மான்செஸ்டர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments