Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மதுபான சாலையின் பின்னனியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி?

மட்டக்களப்பில் அமைக்கப்படும் மதுபான உற்பத்திசாலை திடீரேன மருந்துச் சாலையாக மாறியுள்ளது. அது பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வளமான சாலை நேற்று இரவு (23.04.2017) நடைபெற்ற அறிவார்ந்தவர்களின் கூட்டத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது .
எங்கோ ஒரு குடும்பத்தை கெடுக்க கூட்டம்போடும் நீங்கள் அந்த மருந்து சாலையில் தயாரிக்கும் மருந்து எங்கோ ஒரு குடும்பத்தை சீர்குலைக்காது என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியுமா ?
ஒருபுறம் மட்டக்களப்பில் 57 மதுபான சாலைகள் உள்ளது அவற்றை குறைக்க வேண்டுமென போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுபுறம் கல்குடா மதுபான சாலைக்கு ஆதரவு வழங்க முயற்சிப்பதன் பின்னனி என்ன?
DSC06112
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மதுபான சாலையை யாராலும் நிறுத்த முடியாது என ஐக்கிய தேசிய கட்சிக்காரரான மாமாங்கராஜா கூறியுள்ளார்.
அதைவிட நேற்றைய தினம் நடைபெற்ற அறிவார்ந்தவர்களின் கூட்டத்தை வழி நடத்தியது பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்காகவும் ஐக்கிய தேசிய கட்சியை பகைக்க கூடாது என்பதற்காக மட்டக்களப்பு சமூகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் இந்த செயற்பாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது தமிழர்களை அடகு வைப்பதற்கு சமனானது.
இன்று வரை மட்டக்களப்பு தமிழர் களுக்கு எந்த வித நன்மையையும் செய்யாத ஐக்கிய தேசிய கட்சி கட்சி கேவலம் ஒரு மதுபான சாலைக்கு மட்டும் தமிழர்களின் ஆதரவை எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது.
அனைத்து தொழில்சாலைகள் மற்றும் சலுகைகளை வேறு சமூகங்களுக்கு வழங்கி விட்டு கேடுகெட்ட திட்டங்களை தமிழர்களின் தலையில் கட்டிவிட பார்க்கிறது.
ஐக்கிய தேசிய கட்சி முடிந்தால் இந்த திட்டத்தை தமிழர் பிரதேசம் அல்லாத இடங்களில்  செய்து காட்டட்டும் பாப்போம். அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.
ஆனால் தமிழர்கள் என்றால் அடிமை எதுவும் செய்யலாம் என்ற எண்ணம். கூட்டமைப்பு முடிந்தால் இந்த திட்டம் மாவட்டத்திற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றால் அதனை வெளிப்படையாக பகிரங்கமாக மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் பார்ப்போம். அதை விடுத்து இரகசியமாக கூட்டம் போட்டு ஆராயவேண்டிய தேவை என்ன உள்ளது.
ஊடகங்களை அழைத்து தெளிவு படுத்துங்கள்
ஏறாவூரில் ஆடைதொழிற்சாலையை அமைக்கிறீர்கள், ஆனால் அங்கு பணிபுரியும் பெண்கள் பதுளை வீதி இருந்து வருகிறார்கள். அந்த தமிழ் பெண்கள் சுமார் 20கிலோமீற்றர் பயணம் செய்து இரவு நேரம் வீட்டிற்கு வரவேண்டும்.
எமது பெண்களை எமது அரசியல்வாதிகளே கேவலப்படுத்துகின்றனர். தமிழ் பிரதேசத்தில் ஒரு ஆடைதொழிற்சாலை அமைக்க ஆளுமையில்லாத கூட்டம் மதுபான சாலை அமைக்க கூட்டம் போடுகிறீர்கள்.
வாழைச்சேனை கடதாசி ஆலை வந்தாறுமூலை அரிசி ஆலை ஒரு ஆடைதொழிற்சாலை நெல் களஞ்சிய சாலை இவற்றை அமைக்க என்றாவது கூட்டம் போட்டதுண்டா? இல்லை அதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு தந்திருக்கின்றதா?

Post a Comment

0 Comments