ஹேவிளம்பி வருடப் பிறப்பை முன்னிட்டு நாடெங்கிலும் வியாபாரம் களைகட்டியுள்ளன. இறுதி நேரத்தில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும், புத்தாண்டுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
|
மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடும் முகமாக பொருட்கள் கொள்வனவு செய்வதிலும், புத்தாடைகள் வாங்குவதிலும், அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களைகட்டியுள்ளது. பிறக்க இருக்கும் தமிழ்,சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளிமாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். வாகன நெரிசல் காரணமாக பாதுகாப்புப் பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது!
புத்தாண்டு வியாபாரம் களைகட்டியது!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: