Home » » இராட்சத முதலையின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக காப்பற்றப்பட்டேன்

இராட்சத முதலையின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக காப்பற்றப்பட்டேன்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட துறைநீலாவணை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை முதலைதாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.துறைநீலாவணை 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 35 வயதையுயை தெய்வநாயகம் காண்டீபன்,14 அடி இராட்சத முதலையின் தாக்குதலுக்குள்ளாகி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கட்டுவலையுடன் அதிகாலை 02.30 மணி வேளையில் வீட்டில் இருந்து வெளியேறிய குறித்த நபர் தோணியில் இருந்து கொண்டு மீன் பிடிக்கும் வேளையில், தோணியின் அடிப்பாகத்தை முதலை உடைத்து காலை பிடித்து இழுத்ததாகவும் தோணி இரண்டாக உடைந்து தோணிக்குள் நீர் நிரம்பியதால் தான் நீருக்குள் இழுக்கப்பட்டதாகவும், முதலையின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு பல மணி நேரம் எடுத்தது என்றும் பெரும் பிரயத்தனதுக்கு மத்தியில் ஏனைய மீனவர்களால் முதலையிடமிருந்து காப்பற்றப்பட்டதாகவும் இனி தான் மீன் பிடிக்க செல்வதில்லை எனவும் கூறினார்.

காலிலும் கால் பெருவிரலிலும் பலத்த காயங்ககுள்ளான குறித்த நபர், அருகில் மீன்பிடித்த ஏனைய மீனவர்களால் அதிகாலை 4.00 மணியளவில் காப்பாற்றப்பட்டு, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

1 2
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |