ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்க மேலும் இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றுடன் தொடர்புடைய மக்கள் கட்சியொன்று இலங்கைக்கு மேலும் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நாட்டின் குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியன திருத்தி அமைக்கப்பட வேண்டுமென அந்தக் கட்சி கோரியுள்ளது.
குறித்த கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட மகஜர் ஒன்றின் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் இந்த நிபந்தனை குறித்து அறிவித்துள்ளனர்.
சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் இந்த சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலும் குறித்த கட்சி அதிருப்தி வெளியிட்டிருந்தது என கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த மாதமளவில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை தொடர்பில் விசேட விவாதம்
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியக்குழு இலங்கைக்கு வந்து தமது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.
இந்தக்குழு தமது அறிக்கையை விரைவில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளது.
இந்தநிலையில் குறித்து அறிக்கை தொடர்பில் ஏப்ரல் 19ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் குறித்த குழு இன்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை சந்திக்கவுள்ளது.


0 Comments