அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரின் பிரபலமான இந்த வானொலி நிலையம், ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், பிரபல கியா கார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘கியா ஆப்டிமா’ காரை முத்தமிடும் போட்டிக்கு அழைப்பு விடுத்தது.
இந்த போட்டியின் விதிமுறை என்னவென்றால், வாயை எடுக்காமல் காரை நீண்ட நேரம் முத்தமிட வேண்டும், அவ்வளவுதான். இதில் நீண்ட நேரம் முத்தமிடுபவருக்கு கார் பரிசாக வழங்கப்படும்.
சாப்பாடு, உதட்டுக்கு ஓய்வு, இயற்கை உபாதை உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்காக ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடம் பிரேக் வழங்கப்படும். 50 மணி நேரம் முடிவில் யாரும் வெற்றி பெறவில்லை என்றால், களத்தில் இருக்கும் போட்டியாளர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
வானொலியில் போட்டி குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் ஏராளமான நேயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் குவிய, இறுதியில் 20 பேர் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
திங்கட்கிழமை போட்டி தொடங்கியது. காரை சுற்றி இருபது பேரும் முத்தமிடத் தொடங்கினர். நின்றுகொண்டும், உட்கார்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் முத்தமிட்ட அவர்கள், எப்படியாவது காரை பரிசாக வென்றே ஆக வேண்டும் என்ற வேகத்தில் வைத்த வாயை எடுக்கவில்லை. நேரம் செல்லச் செல்ல சிலர் போட்டியில் இருந்து பின்வாங்கினர்.
போட்டி தொடங்கி 50 மணி நேரம் கடந்த நிலையில், 7 பேர் தொடர்ந்து கார் மீது முத்தமிட்ட வண்ணம் இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில், இலங்கையை சேர்ந்த ஆஸ்டின் நகரைச் சேர்ந்த திலினி ஜயசூரிய என்ற பெண், தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு புதிய கியா ஆப்டிமா கார் பரிசாக வழங்கப்பட்டது. காரின் சாவியைப் பெற்றுக்கொண்ட அவர் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றார். மற்ற 6 பேருக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டன. அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது.
0 comments: