Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிண்ணியாவில் டெங்கு அச்சுறுத்தல்;விரைந்தது விசேட வைத்திய நிபுணர் குழு

கொழும்பிலிருந்து விஜயம் செய்துள்ள விசேட வைத்திய நிபுணர்கள் கிண்ணியாவில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று இரவு முதல் அவர்கள் மருத்துவ சேவைகளை முன்னெடுத்துள்ளதாக கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எச் சமீம் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் அதிகளவில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு விசேட வைத்திய நிபுணர்கள் இரண்டு பேர் நேற்று கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், கொள்கலன்களில் பொருத்தப்பட்டுள்ள விசேட சிகிச்சை பிரிவொன்றும் கிண்ணியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் 113 டெங்கு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிண்ணியாவில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள 66 பாடசாலைகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments