மலையகத்துக்கான புகையிரத சேவைகள் தாமதமாக செயற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு சபை அவசர அறிவித்தல் ஒன்றை சற்று முன்னர் விடுத்துள்ளது.
அஞ்சல் புகையிரதம் ஒன்று பதுளையில் தடம்புரண்டதாலேயே புகையிரத சேவைகள் தாமதமாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சேவைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகையிரத கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.
0 Comments