Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சமஷ்டியை ஒருபோதும் கொடுக்கப்போவதில்லை: மகிந்த அமரவீர உறுதி

“அரசாங்கம் ஒருபோதும் “சமஷ்டி” ஆட்சி முறையை அறிமுகம் செய்யாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட மாட்டாது. இதை மக்கள் நம்ப வேண்டும்”  என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.
மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமே தவிர எவரும் நினைத்தபடி இதில் மாற்றங்களை செய்ய முடியாது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பல பகுதிகளாக பிரிக்கப்படும் என ஒரு சிலர் புரளியை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை.
புதிய அரசியலமைப்பின்படி நாடு ஒன்பது துண்டுகளாக பிரிக்கப்படமாட்டாது. வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட மாட்டாது.
அரசாங்கம் ஒருபோதும் “சமஷ்டி” ஆட்சி முறையை அறிமுகம் செய்யாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட மாட்டாது. இதை மக்கள் நம்ப வேண்டும்.”  என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Post a Comment

0 Comments