Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து கண்காணிப்பு கமரா மூலம் பதிவு

(எஸ்.ஸிந்தூ)
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மஞ்சல்கோட்டில் நேற்று 23.12.2016 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு08.53 மணிக்கு கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் ஆலயத்திற்கு முன்னால் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதி; சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் உடனடியாக அவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.



அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்தவர் மாங்காட்டை சேர்ந்த சிவகுரு ரமேஸ் (36வயது)என்பவர் எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இடம் பெற்ற காணோளியை கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமரா மூலம் பதிவாகியுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிசார் தனியார் பஸ் சாரதியை கைது செய்ததுடன் இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
Video Player

Post a Comment

0 Comments