வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீனாவின் உதவியுடன் 100 விகாரைகளை அபிவிருத்தி செய்ய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வசதிகளுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் விகாரைகளை புனரமைப்பு செய்வதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சீனாவின் குவாந்தூன் பிரதேச பௌத்த சங்கத்தின் தலைவர் வண. மிங்க் மத குருவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 20.24 மில்லியன் ரூபாய்களை உபயோகித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 விகாரைகளில் காணப்படும் ஆரோக்கிய வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்த புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
0 Comments