கிழக்கு மாகாணத்தில் உள்ள பல அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் அனைத்தும் தமது ஆட்சிக்காலத்தில் முழுமையாக நிரப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் நடைபெற்ற போது அதில் முதன்மை விருந்தினராக கலந்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
மாகாணத்தில் உள்ள ஆசிரியர்வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியுள்ளதாகவும், இதற்கு வாய்ப்பேச்சில் இருவரும் சம்மதித்துள்ளதாகவும் தொடர்ந்தும் இதுதொடர்பில் பேசி எழுத்து மூலமாக இதற்கான அனுமதியினைப்பெற்று நியமிக்கவுள்ளதாகவும் தமது ஆட்சிக் காலத்துடனேயே ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் செய்யப்படும் என்றும், தற்போது மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளில் தளபாட வசதிகள் தேவையாகவுள்ளதினால் அவற்றினை நீக்கும் பொருட்டு தேவையான பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்கவுள்ளதாகவும் இதன்மூலம் அப்பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்றார்.

0 Comments