ஔடத கொள்கை திட்டத்திற்கமைய 47 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக சுகதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக இருதய மற்றும் நீரிழிவு போன்று நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்து வகைகளே விலை குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிக விலைகளை கொண்ட மருந்து வகைகளுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதுடன் தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
0 Comments