பம்பலபிடிய கோடீஸ்வர வர்த்தகரான ஷாகிப் சுலைமான் இனது மர்மக் கொலை தொடர்பில் சூட்சயமாக கொலை செய்தவர் யாரென்று தெரிந்தும் அதனை உறுதிப்படுத்த பொலிசார் பல்வேறு முறைகளிலும் யுக்திகளையும் கையாண்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறே, குறித்த மோசடிக்காரன் கோடீஸ்வர வியாபாரியின் உறவினராக இருக்கலாம், இன்னும் குறித்த வர்த்தகரினை கொலை செய்ய கடத்தப்பட இரு கூலிக்காரர்களும் மாவனெல்ல பகுதியிலிருந்து தலைமறைவாகி இருக்கின்றமை குறித்தும் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை பல கோணங்களிலும் விசாரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்டு சந்தேகித்த சுமார் 50 நபர்களது வாக்குமூலமும் தற்சமயம் பதியப்பட்டுள்ளது.
கொலை நடந்து 8 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை சூழ்ச்சிக் காரர் தலைமறைவாகி இருப்பது குறித்து நேற்று முன்தினம்(27)ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட வர்த்தகருக்கு நெருங்கிய நண்பராக இருந்து பின்னர் எதிரியாகிய நபர் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த மர்மக் கொலையின் விசாரணைக்கான 20 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments