நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை பிரிவினரால் கைத செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹெலோ கோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்த விடயம் தொடர்பாக விசாரணைக்காக கொழும்பிலுள்ள நிதி மோசடிகள் விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்த அவர் அதன்படி அங்கு சென்றிருந்த போது கைது செய்யப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து மாலை கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹெலோ கோப் நிறுவனத்தின் 125 மில்லியன் ரூபா பங்குளை கொள்வனவு செய்த விடயத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குரல் அமைப்பினால் நிதி மேசாடிகள் தொடர்பான விசாரணை பிரிவில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமையவே அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கிரிஷ் நிறுவனத்தின் பங்கு கொள்வனவின் போது இடம்பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்க மறியிலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  -(3)


 
 
0 Comments