Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் குருக்கேத்திரன்போர் வடமோடிக்கூத்து சட்டங்கொடுத்தல் நிகழ்வு

குருக்கள்மடம் கிராமம் கூத்துக்கலை செழிப்பான வளர்ச்சியைக் கண்டிருந்த கிராமங்களில் ஒன்று. இக்கிராமத்தில் கூத்தரும் அவர்களுக்கு கூத்தை பயிற்றுவித்த அண்ணாவிமார் பலரும் வாழ்ந்துள்ளனர். இவர்களால் ஆடப்பட்ட கூத்துக்கள் பலசிறந்த கூத்துக்கள் எனப் பெயர் பெற்றவை. அவ்வாறான கூத்துக்    -களில் ஒன்றாக “குருக்கேத்திரன் போர்” வடிமோடிக் கூத்துக் குறிப்பிடத்தக்கது. இக்கூத்தின் சிறப்புக் காரணமாக இதில் ஆடிய பலர் தாம் ஆடிய பாத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். குருக்கே -த்திரன் கதிர்வேற்பிள்ளை, கிருஷ்ணன் சின்னத்தம்பி, அருச்சுணன் கணபதிப்பி    -ள்ளை,  தருமன் முருகப்பர், துரியோதனன் கதிர்காமத்தம்பி, திரௌபதி பூபாலபிள்ளை என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.


இருந்தும் செட்டிபாளையம் கண்ணகியம்மன் கோயில் சடங்கில் 02.06.1974 அன்று நிகழ்த்துகை செய்யப்பட்ட “இராம நாடகம்” வடமோடிக் கூத்தின் பின்னர் குருக்கள்மடம் கிராமத்தில் கூத்து செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது சூழல் நிலவியது. இருந்தும் இராம நாடகத்தைப் பழக்கிய அண்ணாவியாரான குருக்கேத்திரன் கதிர்    -வேற்பிள்ளை அவர்களினால் குருக்கேத்திரன் போர் வடமோடிக் கூத்தை மீண்டும் பயிற்றுவித்து அரங்கேற்றுவதற்கான முயற்சி 1990களில் மேற்கொள்ளப்பட்ட போதும் அக்கூத்து அரங்கேற்றம் காணாமல் முடிவுக்கு வந்தது. 

கூத்து செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனதற்கு 1980களின் பின்னர் நிலவிய யுத்த சூழலுடன் பல சமூகக் காரணங்களும் இணைந்      -திருந்தன. இருந்தும் கூத்தினை தங்களின் வாழ்வியலில் ஒரு பகுதியாக கருதி ஆடி, பார்த்து, அனுபவித்து பழகிய மக்களுக்கு கூத்துச் செயற்பாடுகளை முன்னெடுக்க     -முடியாமல் போனது கவலையான விடயமாகவே விளங்கியது. 

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய நிர்வாகத்தினரின் வேண்டு    -தலுக்கமைய குருக்கள்மடம் கிராமத்தில் மீண்டும் கூத்துச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்  -பட்டன. இதன்படி 06.06.2016 அன்று ஆலய முன்றலில் வைத்து 1960 களில் குருக்கள்மடத்தில் ஆடப்பட்டு அவர்களுக்கு பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்த குருக்கேத்திரன் போர் வட மோடிக் கூத்தினை மீண்டும் ஆடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இக்கூத்திற்கான முதலாவது களரியடித்தல் நிகழ்வு 08.06.2016 ஆரம்பிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத் தலைவர் திரு. வீ.மகேஸ்வரன் தலைமையிலான நிர்வாகசபையினர், மற்றும் ஊர்மக்கள், கிழக்குப்பல்கலைக்கழக நுண்  -கலைத்துறையின் தவைலர் வ.இன்பமோகன், நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார், ப.ராஜதிலகன் என்போர் கலந்து கொண்டனர். இக்கூத்தின் அண்ணாவியார் சித்தாண்டியைச் சேர்ந்த வே.தம்பிமுத்து ஆவார். இவர் வடமோடி, தென்மோடிக் கூத்தில் தேர்ந்த புலமைத்துவம் உடையவர். 

சட்டம் கொடுத்தலுக்கு முன்னர் அதன் தயார்படுத்தல்களுக்காக ஐந்து களரி அடிக்கப்பட்டது. இதில் சிறுவர்கள், ஊர்மக்கள், மூத்த கூத்தர்கள் எனப் பலரும் இணைந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சட்டம் கொடுத்தல் நிகழ்வு எதிர்வரும் 03.07.2016 அன்று குருக்கள்மடம் விஷ்னு கோயிலுக்கு முன்னால் அமைத்துள்ள வழமையான களரியடிக்கும் இடத்தில் இந்நிகழ்வு ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குருக்கள்மடம் கிரமாத்தைப் பொறுத்தவரை முக்கியமானதொரு சமூக நிகழ்வாக கொள்ளப்படத்தக்கது. 

குருக்கேத்திரன்போர் வடமோடிக்கூத்து சட்டங்கொடுத்தல் நிகழ்வு 

இடம் : குருக்கள்மடம் விஷ்னு கோயிலுக்கு முன்னால் அமைத்துள்ள களரி

காலம் : 03.07.2016

நேரம் : மாலை 4.30 மணி

அண்ணாவியார்
வே.தம்பிமுத்து, சித்தாண்டி

தலைமை
வீ.மகேஸ்வரன், தலைவர், ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம், குருக்கள்மடம்

பிரதம அதிதி
கலாநிதி சி.ஜெயசங்கர், பணிப்பாளர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கி.ப.க

சிறப்பு அதிதிகள்
அ.விமல்ராஜ், விரிவுரையாளர், 
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கி.ப.க

சிவஸ்ரீ.வே.கு.நாகராசா, குருக்கள்,
ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம், குருக்கள்மடம்

கூத்தின் முன்னீடும் முகாமைத்துவமும் 
கலாநிதி வ.இன்பமோகன், தலைவர், நுண்கலைத்துறை கி.ப.க.








Post a Comment

0 Comments