இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடயத்தை பாடசாலைக் கல்வியுடன் இணைப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கான எண்ணத்தை பாடசாலை காலத்திலிருந்தே ஒழிப்பதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாக ஆணையாளர் நெவில் குருகே கூறியுள்ளார்.
தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தரம் 6 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு இந்த பாடதிட்டத்தை மூன்று பாகங்களின் கீழ் இணைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments