தனது 25வது பிறந்தநாளை கொண்டாட சென்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்தார். அவரின் பிறந்தநாளே இறந்த நாளாக மாறியது.அமெரிக்காவில் உள்ள 41என்பிசி எனும் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் டெய்லர் டெரல் (வயது 25).
தனது பிறந்தநாளைக் கொண்டாட கரொலினா மாவட்டத்திலுள்ள பிக்ஸா வனப்பகுதிக்கு சென்றுள்ளார். தோழிகளுடன் சென்ற அவர் நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் நடந்து செல்லும்போது அவர் கால் தவறி கீழே விழுந்தார்.அந்த நீர்விழ்ச்சி 185 அடி உயரம் கொண்டதாகும். தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரின் உடல் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் சிக்கி இருந்ததை வனத்துறையினர் கண்டுப்பிடித்து மீட்டனர்.ஜார்ஜியா சதர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இவர், 41என்பிசி தொலைக்காட்சியில் நிருபராக சேர்ந்து பின்னர் தொகுப்பாளினியாக ஆனார்.பிறந்தநாளை கொண்டாட சென்ற டெரல், பலியானதை அறிந்து அவரின் சகாக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


 
 
0 Comments