Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் களப்புப் பகுதியில் 12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் களப்புப் பகுதியில் 12 வயதான சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் பலியான சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments