ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு கடந்த ஆண்டு தொட க்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தது. இதனால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கணிசமாக வீழ்ச்சியடைந்தது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து, மேற்கொண்டு வந்த பேச்சுக்களின் விளைவாக, இலங்கையில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
0 Comments