கூட்டு எதிர்க்கட்சியின் எட்டு பேர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஆளும்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்படி, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினரும் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் இருவருடனும், சுதந்திரக் கட்சியின் ஒரு அமைச்சருடனும் தனித் தனியாக மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
0 Comments