Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மருத்துவ சோதனை வற் வரி குறைப்பு : வர்த்தமானி இன்று வெளிவரும் என்கிறார் பிரதமர்

தனியார் வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளில் மருத்துவ பரிசோதனைக்காக அறவிடும் கட்டணங்களுடனான வற்வரியை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தேவையான நிவாரணங்களை கொடுக்க வேண்டியதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் இதன்படியே இந்த தீர்மானத்தை மேற்கோண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மக்களை சந்திப்பதற்காக நேற்று அந்தப்பகுதிக்கு சென்றிருந்த போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments