Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையில் கேஸ் சிலிண்டரினால் பரவிய தீயில் கருகி பெண் பலி

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையில் கேஸ் சிலிண்டரினால் பரவிய தீயில் கருகி பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வருகைதந்த குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு தீப்பிடித்து உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவாபுரம் பகுதியைச் சேர்ந்த பிள்ளை ஒன்றின் தாயான 32 வயதுடைய சீனித்தம்பி சுவாஜினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவரின் கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது 13 வயது மகளுடன் வாழைச்சேனையில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்த கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்றுள்ளார்.
திருவிழா முடிவடைந்து சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வீட்டுக்கு வந்து தேனீர் தயார் செய்வதற்காக கேஸ் சிலிண்டர் அடுப்பை தயார் நிலை படுத்தும்போது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்டிருந்த கசிவுத் தன்மை காரணமாக இவர் மீது தீப்பிடித்துள்ளது.
உடனடியாக தீக்காயங்களுக்குள்ளான இவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள பிரேத பரிசோதணையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜெயக்கொடி மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஷீர் மேற்கொண்டு தீயினால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments