Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கைவிடப்பட்ட இராணுவ முகாமில் தீ விபத்து! 15 குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்

மட்டக்களப்பு மாவடிவேம்பில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இராணுவ முகாமில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 15 குண்டுகளுக்கு மேல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு மாவடிவேம்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட இராணுவ முகாமில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து காரணமாக இராணுவத்தினரால் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணிவெடிகள் வெடித்ததாகவும், முகாமை சுற்றி பலத்தசத்தத்துடன் பெரும் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments