க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வீண்ணப்பங்களை எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே விண்ணப்பங்களை ஏற்பதற்கான திகதி ஏப்ரல் 28ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை என அறிவிக்கப்பட்டிருந்த போதும் கடந்த வாரத்தில் நாட்டில் நிலவிய சீரற்ற காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லையை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
0 Comments