இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டி 20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அபார வெற்றி அடைந்துள்ளது.
இந்த இரு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்றைய தினம் புனேவில் இடம்பெற்றது.
இதில் இந்திய அணி 5விக்கட்டுக்களால் படுதோல்வி அடைந்துள்ளது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி சற்று தடுமாறிய நிலையில் இருந்தது.
ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான ரோஹித் சர்மா ஓட்டம் எதுவும் பெறாமலும் தவான் 9 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்து 101 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
எனினும், ஆட்டமிழக்காமல் அஸ்வின் 31, சுரேஷ் ரெய்னா 20, யுவராஜ் சிங் 10 ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர்.
தாசுன் ஷனக்க 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மற்றும் தூஷ்மந்த சமீர 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 18வது ஓவரில் 105 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இலங்கை அணிக்காக தினேஷ் சந்திமல் 35 ஓட்டங்களையும், சமரகெதர 25 ஓட்டங்களையும், மிலிந்த சிறிவர்தன 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் கசுன் ராஜித தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 Comments