அரசகரும மொழிகள் திணைக்களத்தின், சிங்கள வாய்மூலப் பரீட்சை இம்முறை மட்டக்களப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை நடைபெறவுள்ள வாய்மூலப் பரீட்சை மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையில் நடாத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு 19 நிலையங்களில் இப்பரீட்சையை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 நிலையங்களில் சிங்கள மொழி பரீட்சார்த்திகளுக்கும், ஏனைய 14 நிலையங்களில் தமிழ் மொழி பரீட்சார்த்திகளுக்கும் வாய்மொழிப் பரீட்சை நடாத்தப்படும்.
இப் பரீட்சைக்கு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கு மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சையை நடாத்தவிருக்கும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் வெள்ளியன்று மட்டககளப்பிற்கு விஜயம் செய்து ஏற்பாடுகளைச் செய்யவுள்ளனர்.
இப் பரீட்சையானது இதவரை காலமும் கொழும்பிலேயே நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. பரீட்சாhத்திகளுக்கான அனுமதி அட்டை திணைக்களத்தால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


0 Comments