Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

68 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான தேசிய நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டது.
காலையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படும் போது சிங்களத்தில் பாடப்பட்டதுடன் பின்னர் நிகழ்வுகள் முடியும் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அண்மையில் சில தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் அது ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேணை கொண்டுவரத்தக்க குற்றமென உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , இன்றைய நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது.
இதற்கு முதல் 1949 இல் சுதந்திரத் தின நிகழ்வின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments