Home » » யானையின் தாக்குதலுக்குள்ளாகிவரும் படுவான்கரை பிரதேச மக்கள்

யானையின் தாக்குதலுக்குள்ளாகிவரும் படுவான்கரை பிரதேச மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச மக்கள் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டு நிம்மதி பெருமூச்சினை விடும்வேளையில் இன்று தொடர்ச்சியான யானையின் தாக்குதலுக்குள்ளாகிவருவது கவலைக்குரிய விடயமாக மாறிவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பலாச்சோலைக் கிராமத்தினுள் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை புகுந்த 6 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டத்தினால் பெரும்சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு கொழுத்தியும், சத்தமிட்டும், ஒருவாறு கிராமத்தை விட்டு யானைக் கூட்டத்தை வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் இக்கிராமத்திலிருந்த வீடு ஒன்றை முற்றாக உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளையும், சேதப்படுத்தியதோடு பயன்தரும், தென்னை, வாழைகளையும், அழித்துவிட்டு காட்டுக்குள் யானைகள் சென்றுள்ளன.
இதன்போது அப்பகுதி கிராமசேவை உத்தியோகஸ்தர், மற்றும், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர். இவ்விடத்திற்கு திங்கட் கிழமை காலை விரைந்த கிராமசேவை உத்தியோகஸ்தர், மற்றும், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும், நிலமையினைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்று நெல்லினை வீடுகளுக்கு கொண்டுசென்றுள்ள மக்கள் அவற்றினை பாதுகாக்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும், அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
n10
1IMG_8886IMG_8902IMG_8904IMG_8926
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |