க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையும், கல்முனை சாகிரா தேசிய பாடசாலையும் வெவ்வேறு துரைகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் ம.சாரூஷன், கலைப்பிரிவில் டிலுக்ஷனா மாணவர்களும் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.
கணிதப்பிரிவில் கல்முனை சாகிரா தேசியபாடசாலை மாணவன் என்.எச்.எம்.சாதிர் முதலாமிடத்தினையும், அதே கல்லூரி மாணவர்களான எஸ்.எச்.சஜாத் இயந்திரவியல் தொழில் நுட்பப்பிரிவிலும், ஜெ.டீ.கித்மத் உயிரியல் தொழிநுட்பப்பிரிவில் முதலாமிடத்தினையும் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கும், கல்முனை வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அத்தோடு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை வைத்தியத்துறைக்கு ஆறு மாணவர்களும், கணிதத்துறையில் இருந்து பொறியியல் துறைக்கு நான்கு மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனைய இரண்டு
துறைகளிலும் இருந்து கனிசமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அருட்தந்தை விறையினர் செலர் தெரிவித்தார்.
துறைகளிலும் இருந்து கனிசமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அருட்தந்தை விறையினர் செலர் தெரிவித்தார்.
மாணவர்களை பாராட்டுவதற்காக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் ஜலீல், மற்றும் பிரதிக்கல்விப்பணிப்பாளரும், விஞ்ஞானப்பிரிவில் முதலாமிடத்தினை பெற்ற மாணவனது பெற்றோருமான மயில்வாகனம் ஆகியோரும் இன்று பாடசாலைக்குச் சென்று வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments