சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய 100 ரகசிய கோப்புகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவற்றை இன்று வெளியிட உள்ளார். நேதாஜியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த ஆவணங்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட உள்ளதாக தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, நேதாஜி தொடர்பான ஆவணங்கள் மாதம் தோறும் 25 கோப்புகள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆவண காப்பகம் அறிவித்துள்ளது.
நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என அவரது குடும்பத்தினர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதனை அடுத்து, பிரதமர் அலுவலகத்தில் இருந்த நேதாஜி தொடர்பான 33 கோப்புகள், தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல், உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை வசம் இருந்த ரகசிய கோப்புகளும், தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
0 Comments