Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

படகு அகதிகளுக்கு தொடர்ந்தும் இடம்தரப் போவதில்லை- அவுஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகுகளில் தமது நாட்டுக்கு வரும் எவருக்கும் குடியேற்ற அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவுஸ்திரேலியா மீண்டும் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் முடீ இதனை தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்த எந்தவொரு இலங்கையரும் வெற்றிபெறவில்லை.
எனவே அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கடல் மார்க்க அகதிகள் கடத்தல் கொள்கையில் மாற்றங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் இடம்பெறுகின்ற அவுஸ்திரேலிய உதவியுடனான திட்டங்களை பார்வையிட சென்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கை பொறுத்தவரை அவுஸ்திரேலியா கடந்த நான்கு வருடங்களாக கல்வி உட்பட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments