மட்டக்களப்பு,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனைக் கிராமத்துக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளன.
குறித்த கிராம மக்கள் நித்திரையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த யானைகள் வீடுகளை உடைத்து அங்கிருந்த நெல் மூடைகளையும் தென்னை மரங்கள், மா ,கொய்யா மரங்களையம் அழித்து துவம்சம் செய்துவிட்டு சென்றுள்ளன.
தற்போது பெரும்போகச் நெற்செய்கை காலமாக இருப்பதனாலும் பருவ மழைக் காலமாக இருப்பதனாலும் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
யானைகளை துரத்தும் வெடிகளோ மற்றும் யானைக்கான எல்லை வேலிகளோ அதுவரை இப்பகுதிக்கு அமைக்கப்படவில்லையெனவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு இரவினையும் அச்சத்துடனும் தூக்கமில்லாமலும் தங்களது பிள்ளைகளை காப்பாற்றும் முகமாக மிகவும் துன்பப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கிரான் பிரதேச செயலாளர்,உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



0 Comments