ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டடத்தையும் நவீன கேட்போர் கூடத்தையும் திறந்துவைப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்புக்கு சமூகமளிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி வி.வினோபா இந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


0 Comments