தென்கொரியாவில், தனது கணவனை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆண்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. அதற்கு நேர் எதிராக முதன் முதலாக, ஒரு ஆணை பாலியல் பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒரு பெண் தென் கொரியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தென்கொரியாவில் வசிக்கும் 40 வயது பெண் ஒருவர், தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். அதற்கு தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, அவரது கணவனை 29 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை செக்ஸ் உறவில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதை வைத்து தான் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ?. இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். அவரை இப்போது காவல்துறை கைது செய்துள்ளது.


0 Comments